தமிழ்நாடு

ரூ.4 கோடி மதிப்புள்ள செல்லாத ரூ.1000 நோட்டு பறிமுதல்: சிவகெங்கையில் பரபரப்பு!

Published

on

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இந்த நோட்டுகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்றும் எச்சரிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் கழித்து தற்போது 1,000 ரூபாய் நோட்டுகள் ரூபாய் 4.5 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் பிசியோதெரபிஸ்ட் ஒருவரது வீட்டில் திடீரென போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் 4.5 கோடி மதிப்பில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து காளையார்கோவில் காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து பிசியோதெரபிஸ்ட் இடம் விசாரணை செய்து வருகின்றனர்.

செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் ஐந்து ஆண்டுகள் கழித்து ரூ.4.5 கோடி அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது சிவகெங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version