தமிழ்நாடு

உயிரிழந்த நோயாளிக்கு ரெம்டெசிவிர் மருந்தா? அதிர்ச்சியில் மருத்துவமனை நிர்வாகிகள்!

Published

on

உயிரிழந்த நோயாளியின் பெயரில் பரிந்துரை சீட்டு வைத்துக்கொண்டு ரெம்டெசிவிர் மருந்தை வாங்க முயற்சித்த நபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க வேண்டும் என்பதன் காரணமாக அந்த மருந்தை வாங்குவதற்கு ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் பலர் மருத்துவமனை வாசலில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நீண்ட வரிசையில் நின்று இந்த மருந்தை வாங்கிக் கொண்டு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரெம்டெசிவிர் மருந்தை போலி ஆவணம் காட்டி பெற முயற்சித்த 3 பேரால் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த மூன்று பேரையும் பிடித்து போலீசார் விசாரணை செய்து வரும் போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன

உயிரிழந்த நோயாளிகளின் பெயரில் பரிந்துரை சீட்டுக்களை வைத்துக்கொண்டு அந்த பரிந்துரையின் அடிப்படையில் ரெம்டெசிவிர் மருந்தை வாங்க முயற்சித்ததாக விசாரணையில் தெரியவந்து உள்ளது. உயிரிழந்த நோயாளிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி அவர்கள் கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு அந்த மருந்தை விற்க முயற்சி செய்வதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

seithichurul

Trending

Exit mobile version