தமிழ்நாடு

மெரீனாவுக்கு வந்தவர்களை திருப்பி அனுப்பிய போலீசார்: பொதுமக்கள் அதிருப்தி!

Published

on

புத்தாண்டு தினத்தில் மெரினா கடற்கரைக்கு வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பியதால் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸும் அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அதே போல் ஒரே நாளில் 74 ஒமிக்ரான் வைரஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தமிழக அரசு நேற்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று புத்தாண்டு விடுமுறை நாள் என்பதால் ஏராளமானோர் மெரினா கடற்கரைக்கு வருகை தந்தனர்.

குடும்பம் குடும்பமாக வருகை தந்த பொதுமக்களை ஒமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பை காரணம் காட்டி காவல்துறையினர் திருப்பி அனுப்பியதால் பொதுமக்கள்தான் அதிருப்தியுடன் திரும்பி சென்று கொண்டிருக்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒமிக்ரான் வைரஸ் மற்றும் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் மிக வேகமாக பரவி வருவதால் இன்னும் சில நாட்களுக்கு மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று கூறப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version