தமிழ்நாடு

சாட்டை துரைமுருகன் மீது குண்டாஸ்: திருவள்ளூர் காவல்துறை அதிரடி!

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பாக்ஸ்கான் ஆலையில் உள்ள பெண் தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய போது அந்த தொழிலாளர்களின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக யூடியூபர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் மீது நீதிபதி கடும் விமர்சனம் வைத்திருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது சாட்டை துரைமுருகன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் ஆலை பெண் தொழிலாளர்கள் உடல் நிலை பற்றி வதந்தி பரப்பிய புகாரில் திருவள்ளூர் ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பெயரில் யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து அவர் இப்போது ஜாமீனில் வெளிவர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் மு கருணாநிதி ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டிருந்த சாட்டை துரைமுருகன் பின்னர் நிபந்தனைகளுடன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் ஜாமீனில் குறிப்பிட்டிருந்த நிபந்தனைகளை அவர் மீறியதாகவும் தொடர்ந்து வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாகவும் தற்போது சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது அடுத்து நாம் தமிழர் கட்சி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது என்று குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version