தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி போடும்போது சிக்கிய ரூ.50 லட்சம் மோசடி செய்த பெண்!

Published

on

ஏலச்சீட்டு நடத்தி 50 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்த பெண் ஒருவர் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் போது சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேர்ந்த கொடுங்கையூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சசிகலா மற்றும் ஈஸ்வரி ஆகிய இரண்டு பேரும் ஏலச்சீட்டு நடத்தி 50 லட்ச ரூபாய்க்கு மேல் மோசடி செய்து தலைமறைவாகினர்.

இந்த நிலையில் ஈஸ்வரி கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்ட நிலையில் சசிகலாவை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் சசிகலா தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கலாம் என்ற அடிப்படையில் தடுப்பு ஊசி செலுத்தியவர்கள் பட்டியலை போலீசார் விசாரணை செய்தனர்.

சுகாதாரத் துறை உதவியுடன் இந்த விசாரணை நடத்தியதில் காஞ்சிபுரத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் சசிகலா தடுப்பூசி போட்டுக் கொண்டது அவருடைய ஆதார் எண் மூலம் தெரியவந்தது. உடனடியாக காஞ்சிபுரம் சென்ற தனிப்படை அங்கு தேடுதல் வேட்டை நடத்திய போது சசிகலா சிக்கினார். இதனை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதால் 50 லட்ச ரூபாய் மோசடி செய்து தலைமறைவான பெண் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version