இந்தியா

இவர்களுக்கெல்லாம் பாஸ்போர்ட் கிடையாது: அதிரடி உத்தரவு

Published

on

போலிசார் மற்றும் இராணுவத்தினர் மீது கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாஸ்போர்ட் மற்றும் அரசு சேவைகளுக்கான பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என காஷ்மீர் காவல்துறை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த பல வருடங்களாக போலிசார் மற்றும் இராணுவத்தினர் மீது கல்வீச்சு உள்பட பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் இராணுவத்தினர் மற்றும் போலீசாரின் பாதுகாப்பு கருதி அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி போலிசார் மற்றும் இராணுவத்தினர் மீது இனி யாராவது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு குற்றம் சாட்டப்பட்டால், அவர்களுக்கு இனி பாஸ்போர்ட் கிடைக்காது என்றும் அதேபோல் அரசு சேவைகளுக்கான பாதுகாப்பு சான்றிதழ் கிடைக்காது என்றும் அதிரடியாக காஷ்மீர் மாநில காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து காஷ்மீர் மாநிலத்தின் குற்ற புலனாய்வு துறையின் சிறப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் குறித்து சிசிடிவி காட்சிகள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் போன்கள் மூலம் எடுக்கப்பட்ட பதிவுகள் சரிபார்க்கப்படும் என்றும் அதில் ராணுவத்தினர் மற்றும் போலீசார் மீது கல் எறிந்து தெரியவந்தால் அவர்களுக்கு பாஸ்போர்ட் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து இனி வருங்காலத்தில் போலிசார் மற்றும் இராணுவத்தினர் மீதான கல்வீச்சு சம்பவங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version