தமிழ்நாடு

பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் எவை எவை?

Published

on

அதிமுக கூட்டணியில் முதல் காட்சியாக கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது அந்த 23 தொகுதிகள் எவை எவை என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எவை எவை என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாமக தலைவர் ஜிகே மணி தலைமையில் உள்ள குழு நேற்று அதிமுகவுடன் பேச்சு நடத்தியது.

பாமக போட்டியிட விரும்பும் 23 தொகுதிகள் அடங்கிய உத்தேச பட்டியலை அதிமுக தலைமை இடம் நேற்று அளிக்கப்பட்டது. அந்த 23 தொகுதிகளில் கும்முடிபூண்டி, திருத்தணி, வேளச்சேரி, செங்கல்பட்டு, திருப்போரூர், சோளிங்கர், ஆற்காடு, ஓசூர் பாப்பிரெட்டிப்பட்டி, பென்னகரம், ஆரணி, கலசபாக்கம், அணைக்கட்டு, திண்டிவனம், விக்கிரவாண்டி, சங்கராபுரம், மேட்டூர், வீரபாண்டி, குன்னம், ஜெயங்கொண்டான், பண்ருட்டி, நெய்வேலி, காட்டுமன்னார்கோவில் ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

பாமக கேட்ட இந்த 23 தொகுதிகளையும் அப்படியே அதிமுக தருமா? அல்லது சில மாற்றங்கள் செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Trending

Exit mobile version