தமிழ்நாடு

மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கும் பாமக? தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published

on

தேர்தலில் குறைந்த அளவு வாக்கு சதவீதம் பெற்ற மாநில கட்சிகளுக்கு தங்களது மாநில கட்சி அந்தஸ்தை திரும்பப் பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஆறு கட்சிகளுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு கட்சியானது மாநில கட்சி அந்தஸ்தை பெற, சட்டமன்றத் தேர்தலில் 6 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் அந்த கட்சியின் மாநில கட்சி என்ற அந்தஸ்து பறிபோகும். இதுதான் தேர்தல் ஒரு கட்சியானது மாநிலக் கட்சி அந்தஸ்தை பெறுவதற்கான அடிப்படைத் தகுதிகளாக தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது.

இந்நிலையில் மாநில கட்சிக்குறிய தகுதிகளை பூர்த்தி செய்யாததால் பாட்டாளி மக்கள் கட்சி உட்பட ஆறு கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி, உங்களுடைய மாநில கட்சி அந்தஸ்தை ஏன் திரும்பப் பெறக் கூடாது எனக் கேள்வி எழுப்பியுள்ளது. இதனையடுத்து அந்த கட்சிகள், தேர்தலில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version