தமிழ்நாடு

பாமக மாவட்ட செயலாலர் வெட்டி கொலை: 144 தடை உத்தரவு பிறப்பித்த கலெக்டர்

Published

on

பாமக செயலாளர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டதை அடுத்து பதட்டம் காரணமாக மாவட்ட கலெக்டர் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணி என்பவர் நேற்று இரவு மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட தேவமணியின் உடல் காரைக்கால் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் திருநள்ளாறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா என்பவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

காரைக்கால் அரசு மருத்துவமனையில் தேவமணி வீடு உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேவமணி கொலை காரணமாக அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளதால் கலவரத்தை தடுக்கும் வகையில் திருநள்ளாறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

மேலும் பாமக மாவட்ட செயலாளர் தேவமணி வெட்டிய கும்பல் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருசக்கர வாகனத்தில் வந்த தேவமணியை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version