தமிழ்நாடு

உடனே இதை சரி பண்ணுங்க…கோபத்தின் உச்சிக்கே போன ராமதாஸ்.. என்ன நடந்தது?

Published

on

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பணியாளர்களை குத்தகை முறை பணிக்கு மாற்றக்கூடாது; என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்.

ramadoss

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் 2006-ஆம் ஆண்டில் அமர்த்தப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றி வந்த ஏராளமானோர், அவர்களுக்கே தெரியாமல் குத்தகை ஒப்பந்த பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இது நியாயமற்றது!

பத்தாண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றிய அவர்கள், தங்களை பணிநிலைப்பு செய்ய வேண்டும் என்று 7 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது!

தினக்கூலி பணியாளர்களாக நீடித்தால் அவர்கள் பணி நிலைப்பு கோருவார்கள் என்பதால், அதைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. இது தினக்கூலி பணியாளர்களை உரிமையற்றவர்களாக மாற்றும் செயல் ஆகும். இச்செயல் இயற்கை நீதிக்கும் எதிரானது!

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தினக்கூலி பணியாளர்களை குத்தகை ஒப்பந்த பணியாளர்களாக மாற்றிய ஆணையை அரசு இரத்து செய்ய வேண்டும். மாறாக, 15 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலிகளாக பணியாற்றும் அவர்கள் அனைவரையும் அரசு பணி நிலைப்பு செய்ய வேண்டும், என்று குறிப்பிட்டு உள்ளார்.

 

Trending

Exit mobile version