தமிழ்நாடு

பாஜக வேட்பாளரை கண்டித்து பாமக ஆர்பாட்டம்! ஒரே கூட்டணியில் இருந்தும் குழப்பம்!

Published

on

அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து இருந்தாலும் திடீரென பாஜக வேட்பாளரை கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளில் கிடைத்தன என்பதும், இரண்டு கட்சிகளும் தங்களுக்கு கிடைத்த தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரை கண்டித்து பாமகவினர் திடீரென போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கலிவரதன் என்பவர் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களை ஒருமையில் பேசி விமர்சனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனை அடுத்து பாமகவினர் ஆத்திரமடைந்து பாஜக வேட்பாளர் கலிவரத்தனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே கூட்டணியில் பாமக மற்றும் பாஜக இருந்தும் இரு தரப்பினரும் ஒற்றுமை இல்லாமல் இந்த பகுதியில் இருப்பதால் பாஜக வேட்பாளரின் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளதாக அந்த பகுதியில் உள்ள மக்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version