இந்தியா

தொடங்கியது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர்… எம்.பியாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றார்!

Published

on

17வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக இந்தியாவின் பிரதமாக மோடி பொறுப்பேற்ற பிறகு இன்று முதல் கூட்டத்தொடர் தொடங்கியது.

முன்னதாக குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமாருக்கு ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பின்னர் இடைக்கால சபாயாநகர் புதியதாக மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.க்களுக்கு பதவி பிராமணம் செய்து வைத்தார். வாரணாசி தொகுதி எம்.பியாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றார்.

இவரை தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்காரி, ஸ்மிருதி இரானி, ஹர்ஷவர்தன்ம் காங்கிரஸ் எம்.பி.க்கள் சுரேஷ் கொடிக்குனில், சிரோன்மணி அகாலி மற்றும் பலரும் எம்.பியாக பதவியேற்றனர்.

முதல் கூட்டத்தொடருக்கு முன்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பிரதமர் மோடி, “இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. முன்பு எப்போது இல்லாத அளவிற்கு முதல் முறையாகப் பெண் உறுப்பினர்கள் அதிகப்படியாக உள்ளனர்.

பல ஆண்டுகளுக்குப் பின்பாக தனி பெரும்பான்மையுடன் ஒரு அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது. தொடர்ந்து 2வது இரண்டாவது முறையாக பாஜவுக்கு மக்கள் தங்களது ஆதரவை அளித்துள்ளனர்.

மக்கள் நலனுக்கான முடிவுகள் எடுக்க அனைத்து கட்சி ஆதரவும் மத்திய அரசுக்கு வேண்டும். எதிர்க்கட்சிகள் மிகவும் முக்கியமானவர்கள் என்பதை நாங்கள் அறிவோம். ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை வரவேற்கிறோம். இந்த கூட்டத்தொடரில் எதிர்க் கட்சிகள் முனைப்புடன் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்” என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version