இந்தியா

2020-ல் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு அதிகரிப்பு.. எப்படி?

Published

on

2020-ம் ஆண்டு பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற விவரங்களை, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 36 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. 2020 ஜூன் 30 நிலவரத்தின் படி பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 2.85 கோடி ரூபாய். இதுவே சென்ற ஆண்டு 2.49 கோடி ரூபாய்.

பிரதமர் மோடி செய்துள்ள பாதுகாப்பான முதலீடுகளின் வழியாக 33 லட்சம் ரூபாயும், வங்கி டெபாசிட்கள் மூலமாக 3.3 லட்சம் ரூபாயும் லாபம் அடைந்துள்ளதாகவும், அதுவே அவரது சொத்து மதிப்பு உயர காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வங்கி கணக்கில் 31,450 ரூபாயும் வங்கி கணக்கில் 3,38,173 ரூபாயும், பிக்சட் டெபாச்ட் போன்றவற்றில் 1,60,28,939 ரூபாயும் வைத்துள்ளார். தேசிய சேமிப்பு பத்திரத்தில் 8,43,124 ரூபாயும், ஆயுள் காப்பீட்டில் 1,50,957 ரூபாயும், வரி சேமிப்பு பத்திரத்தில் 20 ஆயிரம் ரூபாயும் முதலீடு செய்துள்ளார். மொத்த அசையும் சொத்துக்களின் மதிப்பு மட்டும் 1.75 கோடி ரூபாய். அதே நேரம் வங்கிகளில் எந்த கடனும் இவரது பெயரில் இல்லை.

45 கிராம் மதிப்பில் தங்க மோதிரம் மற்றும் நகைகள் உள்ளன. அவற்றின் மதிப்பு 1.5 லட்சம் ரூபாய். காந்திநகரில் 3,531 சதீர அடியில் வீடு ஒன்று உள்ளது.

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ள நிலையில், உள்துறை அமைச்ச அமித் ஷாவின் சொத்து மதிப்பு 28.63 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது. இதுவே 2019-ம் ஆண்டு 32.3 கோடி ரூபாயாக இருந்தது.

அமித் ஷாவுக்கு 13.56 கோடி ரூபாய் மதிப்பில் 10 அசையா சொத்துக்கள் உள்ளன. பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின் படி அமித் ஷாவின் கையில் 15,814 ரூபாயும், வங்கி கணக்கில் 1.04 கோடி ரூபாயும், இன்சூரன்ஸ் பென்ஷன் பாலிசிகளாக 113.4 லட்சம் ரூபாயும், 2.79 லட்சம் பிக்சட் டெபாசிட்டாகவும், 44.47 லட்சம் மதிப்பிலான தங்க நகை ஆபரணங்களுக்கும் உள்ளன.

அமித் ஷாவின் சொத்து மதிப்பு சரிவுக்கு, பங்குச்சந்தை சார்ந்த அவரது முதலீகளில் ஏற்பட்ட சரிவே என்று கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version