இந்தியா

விவசாயிகளுக்கு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது: பிரதமர் மோடியின் இன்றைய மான்கிபாத் உரை!

Published

on

பிரதமர் மொடி ஒவ்வொரு வாரமும், ஞாயிற்றுக்கிழமை வானொலியில் மான்கிபாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அப்படி இன்று நாட்டுமக்களிடம் பேசிய பிரதமர் மோடி புதிய விவசாய திட்டம், மரபுச் சின்னங்கள் என பல்வேறு பிரச்சினைகள் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அவை பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

விவசாயம்

இந்தியாவில் விவசாயம் மற்றும் அதோடு தொடர்புடையவற்றுடன் ஒரு புதிய பரிமாணம் இனைகிறது. அண்மையில் நிறைவேற்றப்பட்ட விவசாயத் துறை சார்ந்த சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். விளை பொருட்களுக்கு உரிய விலை என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறினார்.

கொரோனா

கொரோனா விஷயத்தில் எந்த வகையான கவனக்குறைவையும் நாம் வெளிப்படுத்தக் கூடாது. நாம் தொடர்ந்து கொரோனாவுக்கு எதிரான போரை முழு சக்தியோடு எதிர்கொள்ள வேண்டும். கொரோனாவை தடுக்க கொரோனாவுக்கு ஏற்ற நடத்தை விதிமுறைகளை நாம் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

அம்பேத்கர் நினைவு நாள்

டிசம்பர் மாதம் 6-ம் தேதியன்று பாபா சாஹேப் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் வருகிறது. இந்தநாளில் பாபா சாஹேபுக்கு நாம் நினைவஞ்சலியைச் செலுத்துவோம். அவர் வடிவமைத்த அரசியலமைப்புச் சட்டம் நமக்கு அளித்திருக்கும் கற்றைகளை நாம் மீள்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

2020

2020 என்ற இந்த ஆண்டு நிறைவை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது. புதிய எதிர்பார்ப்புகள், புதிய நம்பிக்கைகளோடு, நாம் முன்னேறுவோம். நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருந்து, நட்புக்காக ஆக்கப்பூர்வமாகச் செயல்படுங்கள்.

சுதேசி

உள்ளூர் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் போது, ஸ்ரீ அரவிந்தரின் சுதேசிக் கோட்பாடு நம்முடைய பாதையில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சுதேசியைக் கடைப்பிடிப்பது தொடர்பாக அவர் கூறியவற்றை இன்று நாட்டு மக்கள் அனைவரும் படிக்க வேண்டும். டிசம்பர் மாதம் 5-ம் தேதி ஸ்ரீ அரவிந்தரின் மறைந்த நாள். இவரைப் பற்றிப் படிக்கும் போது புதிய பாதையை அறிந்துகொள்ள முடியும்.

கலாச்சாரம்

இந்தியாவின் கலாச்சாரம் என்றுமே உலகத்தின் கவனத்தை ஈர்ப்பவைகளாக உள்ளன. சில நாட்கள் முன்பு உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டது. உலகப் பாரம்பரிய வரம் என்பது கலாச்சார விரும்பிகளுக்கு அற்புதமான சந்தர்ப்பத்தை அளிக்கிறது. நூதனமான வழிவகைகளில் இந்தப் பாரம்பரிய வாரத்தை மக்கள் கொண்டாடுவதைப் பார்த்தோம்.

seithichurul

Trending

Exit mobile version