இந்தியா

சொத்து விவர அட்டை.. இந்திய கிராம மக்களுக்கான புதிய கடன் திட்டம்.. பயன் என்ன?

Published

on

பிரதமர் மோடி இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்வாமித்வா என்னும் கிராம மக்களுக்கான சொத்து விவர அட்டை என்னும் திட்டத்தை தொடக்கி வைத்தார்.

ஸ்வாமிதா எனற சொத்து விவர அட்டை கிராமப்புறங்களில் வைத்துள்ள சொத்துக்களின் அடையாளமாக இருக்கும். இந்த கார்டை பயன்படுத்து விவசாய நிலங்கள், வீடுகள் போன்றவற்றை அடகு வைத்து கடன் பெற முடியும்.

கிராம இத்தனை நாட்களாக சொத்துக்களை அடைமானம் வைக்க வேண்டும் என்றால் வட்டிக் கடை முதலாளிகளைத் தான் அதிகளவில் நம்பி வந்தனர். இந்நிலையில் இந்த கார்டினை பெறும் விவசாயிகள் அந்த கார்டு மற்றும் பிற சொத்து ஆவணங்களைச் சமர்ப்பித்து வங்கிகள் கடன் பெறலாம்.

முதற்கட்டமாக இந்த திட்டம் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தராகண்ட், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 1 லட்சம் பயனாளிகள் பரிசோதனை முயற்சியில் பயனடைய உள்ளார்கள்.

இந்த கார்டை வைத்துள்ள விவசாயிகளின் சொத்தை யாராலும் ஏமாற்ற முடியாது என்றும் கூறப்படுகிறது. இத்தனை நாட்களாக நகை கடை வைத்து கடன் பெற்று வந்த விவசாயிகளுக்கு இனி அவர்களின் சொத்தை வங்கியில் அடைமானம் வைத்து கடன் பெறும் முறையாக இது இருக்கும்.

விரைவில் இந்த திட்டமானது நாடு முழுவதும் உள்ள 6.62 லட்சம் கிராமங்களுக்கும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version