இந்தியா

மக்களின் முடிவை தலை வணங்கி ஏற்கிறோம்: பிரதமர் மோடி!

Published

on

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவியது பாஜக. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வலுவாக இருந்த பாஜகவை வீழ்த்தி, ஆட்சியை பறித்துள்ளது காங்கிரஸ் கட்சி. தெலுங்கானாவில் டிஆர்எஸ் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. மிசோரமில் காங்கிரஸ் இடம் இருந்து மிசோரம் தேசிய முன்னணி ஆட்சியை பறித்துள்ளது. இதில் பாஜக பெரும் அடியை பெற்றுள்ளது.

இந்த தேர்தல் முடிவுகள் குறித்து பேசியுள்ள பிரதமர் மோடி, 5 மாநில தேர்தல்களில் மக்களின் முடிவை பணிவுடன் தலை வணங்கி ஏற்கிறோம். வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள். மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பணியாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி.

தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ், சந்திரசேகரராவ், மிசோரம் தேசிய முன்னணி ஆகியோருக்கு வாழ்த்துகள். இன்றைய முடிவுகள் மக்களுக்கு சேவை செய்வதற்கும், நாட்டின் வளர்ச்சிக்கு கடினமாக உழைப்பதற்கான உத்வேகத்தையும் தரும். 5 மாநிலங்களிலும் இரவு, பகல் பாராமல் உழைத்த பாஜகவினரையும் வணங்குகிறேன் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version