இந்தியா
பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
![pm modi 1200 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/pm-modi-1200.jpg)
பிரதமர் நரேந்திர மோடி தனது சொத்து மதிப்பு எவ்வளவு என அவரது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவருடைய தற்போதைய சொத்து மதிப்பு 3 கோடியே 7 லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 2 கோடியே 85 லட்சம் ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டு அது 22 லட்சம் அதிகரித்துள்ளது.
இந்த சொத்து மதிப்பு உயர்வுக்குக் காரணம் குஜராத் மாநிலம் காந்தி நகர் எஸ்பிஐ வங்கி கிளையில் அவர் வைத்து இருக்கும் வைப்புத் தொகை வட்டி விகித லாபம் தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கில் 1.5 லட்சம் ரூபாயும், ரொக்கம் கையிருப்பாக 36,000 ரூபாய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியிடம் 1.48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு தங்க மோதிரங்களும், அடையும் சொத்துக்களின் மதிப்பு 1.97 கோடி ரூபாயாகவும் உள்ளது. இவரது பெயரில் எந்த வாகனமும், எவரிடமும் எந்த கடனும் வாங்கவில்லை. பிரதமர் ஆன பிறகு இவர் எந்த முதலீடு செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கும் சொந்தமாக 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பில் சொந்த வீடு ஒன்று உள்ளது.