இந்தியா

விரைவில் மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்கிறார் பிரதமர் மோடி – யாருக்கெல்லாம் வாய்ப்பு?

Published

on

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சரவையை விரைவில் மாற்றியமைக்கப் போவதாக தகவல்கள் வந்துள்ளன. அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் சட்ட மன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், அதை மனதில் வைத்து பலருக்கு அமைச்சரவைப் பதவிகள் அளிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. மேலும் 2024 ஆம் ஆண்ட நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்களையும் கவனத்தில் கொண்டு அமைச்சர் பொறுப்புகள் ஒதுக்கப்படுமாம்.

சில மாதங்களுக்கு முன்னர் மத்தியப் பிரதேச காங்கிரஸின் முக்கியப் புள்ளியாக இருந்த ஜோதிராதித்ய சின்கா, பாஜகவில் இணைந்து, அம்மாநிலத்தில் பாஜக ஆட்சியமைக்க உறுதுணையாக இருந்தார். அவருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. அதேபோல அசாம் மாநிலத்தில் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்த சர்பானந்தா சோனாவாலுக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் இருக்குமாம்.

ராம் விலாஸ் பஸ்வான் மறைவைத் தொடர்ந்து அவரின் மத்திய அமைச்சரவைப் பொறுப்பு அவரின் உறவினர் பசுபதி பராஸுக்கு கொடுக்கப்படலாம். அதேபோல பிகாரைச் சேர்ந்த சுசில் மோடி, மகாரஷ்டிரத்தின் நாராயண் ரானே மற்றும் புபேந்திர யாதவ் ஆகியோரும் அமைச்சரவையில் இடம் பிடிக்க உள்ளார்களாம்.

உத்தரப் பிரதேசத்தில் விரைவில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அம்மாநிலத்தைச் சேர்ந்த பலருக்கு அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்படுமாம்.

மத்திய அமைச்சரவையில் மொத்தம் 81 உறுப்பினர்கள் இருக்கலாம். தற்போது 53 அமைச்சர்கள் மட்டுமே பொறுப்பில் இருக்கிறார்கள். எனவே கூடுதலாக 28 பேர் சேர்க்கப்படலாம்.

 

Trending

Exit mobile version