தமிழ்நாடு

தமிழ் மொழியை கற்க முடியவில்லையே.. பிரதமர் மோடி வருத்தம்!

Published

on

அழகிய மொழியாகிய தமிழ் மொழியை கற்க தனக்கு மிகவும் ஆசை என்றும் ஆனால் தன்னால் அது முடியவில்லை என்றும் தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது தன்னுடைய குறைபாடுகளில் ஒன்று என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இன்று மான் கி பாத் உரையில் பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். அதில் அழகிய மொழியான தமிழை சரியாக படிக்க முடியவில்லை என்றும் அது என்னுடைய குறைபாடுகளில் ஒன்று என்றும் தெரிவித்தார்.

மேலும் கொரோனாவுக்கு எதிரான போரில் அஜாக்கிரதையாக பொதுமக்கள் இருக்கக்கூடாது என்றும் கொரோனா வைரஸ் குறைந்து விட்டாலும் பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் மதுரையை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வாழைக்கழிவுகளில் இருந்து ஏராளமான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து வருவதாகவும் அவருடைய முயற்சிக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்தார். நமது அறிவும் தன்னம்பிக்கையும் வலிமையாக இருந்தால் எதை கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை என்றும் தற்கால இளைஞர்களிடம் புதிய வித மாற்றத்தையும் உணர முடிகிறது என்றும் இந்திய அறிவியலின் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் கோடை காலத்தில் மழை நீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் நீர்நிலைகளை சுத்தப்படுத்தி முறையாக தூர்வாரி வைத்திருந்தால் மழைநீரை சேமித்து கோடை காலத்தில் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Trending

Exit mobile version