இந்தியா

கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவித்த மோடி!

Published

on

இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு நன்றியும், அவர் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பெற்றதற்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி கடந்த மாதம் பாஜகவில் இணைந்தார். தற்போது மக்களவை தேர்தலுக்காக பாஜகவுக்கு தேர்தல் பணியும் செய்து வருகிறார் அவர். இந்நிலையில் ஜடேஜாவின் தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். இதனையடுத்து நெட்டிசன்கள் ஜடேஜாவுக்கு எதிராக மீம்ஸ் போட்டு கலாய்க்க ஆரம்பித்தனர்.

இதனையடுத்து ஜடேஜா தான் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து நன்றி தெரிவித்துள்ளார். அதில், நன்றி ஜடேஜா, உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதற்கு ஜடேஜாவுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

உலகக் கோப்பை போட்டியில் விளையாட உள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் ஆல் ரவுண்டர் ஜடேஜா தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version