இந்தியா

ஜோபைடனை சந்திக்க அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு முன்னர் இந்திய பிரதமர் மோடி உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தார் என்பதும், பல கோடி முதலீடுகளை அவர் பெற்று வந்தார் என்பதும் அது மட்டுமின்றி இந்தியாவுக்கு ஆதரவாக பல நாடுகளில் திரட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து அவர் எந்த நாட்டுக்கும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் சுற்றும் வாலிபனாக கடந்த 2014 முதல் 2019 வரை இருந்த பிரதமர் மோடி, வ் வைரஸ் காரணமாக வெளிநாட்டு சுற்றுப்பயணம் எதுவும் மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். இன்று பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்காவில் அவர் அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் அவர்களை சந்தித்து பேச உள்ளார். அதனை அடுத்து ஐநா பொதுச் சபை மற்றும் குவாட் மாநாட்டில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை மறுநாள் குவாட் மாநாடு அமெரிக்காவில் நடைபெற இருப்பதாகவும் அதனை அடுத்து வரும் 25-ஆம் தேதி ஐநா பொதுச்சபைக் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் இந்த இரண்டு கூட்டங்களிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

நீண்ட இடைவெளிக்கு பின் பிரதமர் மோடி அமெரிக்க செல்வதால், அவருடைய பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Trending

Exit mobile version