தமிழ்நாடு

சென்னை வந்தார் பிரதமர் மோடி: ஆதரவு மற்றும் எதிர்ப்பு ஹேஷ்டேக்குகள் வைரல்!

Published

on

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று தமிழகம் மற்றும் புதுவை வருகை தர இருக்கும் பிரதமர் மோடி சற்று முன்னர் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தனி விமானத்தில் சென்னை வந்த பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் வரவேற்றார். இதனையடுத்து அவர் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சென்றுள்ளார். புதுச்சேரியில் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு அவர் மீண்டும் கோவை வரவிருப்பதாகவும், அங்கும் சில நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள இருப்பதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும்போது #GoBackModi மற்றும் #TNWelcomesModi ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் வைரலாகும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்றும் இந்த ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் மற்றும் புதுவை வரும் பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மட்டுமின்றி அதிமுக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version