இந்தியா

பிட்காயினுக்கு இந்தியா அங்கீகாரம்? பிரதமர் மோடியின் டுவிட்டர் பதிவால் பரபரப்பு!

Published

on

பிரதமர் மோடி பிட்காயினுக்கு அங்கீகாரம் தந்து விட்டதாகவும் இந்திய அரசே சில பிட்காயினை வாங்கி இருப்பதாகவும் பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கில் பதிவு செய்யப்பட்டு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யபட்டு மேற்கண்டவாறு போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு அந்த டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிட்காயினை இந்தியா இன்னும் அங்கீகரிக்காத நிலையில் திடீரென பிரதமர் மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில் இந்தியா பிட்காயினை அங்கீகரித்து விட்டது என வெளியான டுவிட்டர் பதிவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு சில நிமிடங்கள் ஹேக் செய்யப்பட்டு அதில் பிட்காயின் குறித்த ட்வீட் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டுவிட்டர் அலுவலத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கில் இருந்து அந்த போலியான டுவிட் டெலிட் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் ஒரு சிலர் இந்த இதுகுறித்த புகைப்படத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version