இந்தியா

விருதுநகர் அருகே பட்டாசு தொழிற்சாலை விபத்து: தமிழில் டுவீட் போட்ட பிரதமர்!

Published

on

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது என்பதும் மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த வெடி விபத்தில் பட்டாசு தொழிற்சாலையில் நான்கு அறைகள் இடிந்து தரைமட்டமானதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் இந்த பட்டாசு ஆலை தீ விபத்து குறித்து கேள்விப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து தனது இரங்கலை டுவிட்டரில் தமிழில் பதிவு செய்துள்ளார்.

மேலும் தேசிய நிவாரண நிதியில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கவும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் விருதுநகர் தீவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ 2 லட்சம் கருணைத் தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. தீவிர காயமடைந்தவர்களுக்கு ரூ 50, 000 வழங்கப்படும். தமிழகத்தின் விருதுநகர் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து வருத்தம் அளிக்கிறது. இந்தத் துயரமான நேரத்தில், உயிர் இழந்தவர்களின் குடும்பங்களைப் பற்றிக் கவலைப் படுகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ, களத்தில் அலுவலர்கள் பாடுபட்டு வருகிறார்கள்:

seithichurul

Trending

Exit mobile version