தமிழ்நாடு

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: டுவிட்டரில் ‘கோபேக்மோடி’ டிரெண்ட்!

Published

on

பிரதமர் மோடி இன்று தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் பிரச்சாரம் காரணமாக வர இருக்கும் நிலையில் வழக்கம்போல் ‘கோபேக்மோடி’ என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ராகுல் காந்தி, மோடி, அமித்ஷா, பிரியங்கா காந்தி உள்பட பல தேசிய தலைவர்கள் தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றார்கள்.

அந்த வகையில் இன்று பிரதமர் மோடி தமிழகம் மற்றும் புதுவையில் பிரசாரம் செய்ய உள்ளார். குறிப்பாக தமிழக பாஜக தலைவர் எல் முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்ள உள்ளார் என்பதும் இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் வருகையால் தாராபுரத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் புதுவையிலும் மோடி அதிமுக-பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கவுள்ளார் என்பதும் இதனை அடுத்து புதுவையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒவ்வொரு முறை பிரதமர் தமிழகம் வரும்போது இந்த ‘கோபேக்மோடி’ என்ற ஹேஷ்டேக் வைரலாகி வரும் நிலையில் இன்று காலை முதலே ‘கோபேக்மோடி’ என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெஅண்டுக்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version