இந்தியா

விரைவில் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் பல்வேறு கட்டுமான திட்டங்களைத் திறந்து வைக்கும் மோடி!

Published

on

விரைவில் தேர்தல் நடைபெற உள்ள அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று பல்வேறு கட்டுமான திட்டங்களைத் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.

முதலில் அசாம் செல்லும் பிரதமர் மோடி அங்கு இரண்டு மருத்துவமனைகள் மற்றும் அசோம் மாலா என்ற தேசிய நெடுஞ்சாலை திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

அடுத்து பாஜகவுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ள மேற்கு வங்கம் சென்று, ஹால்டியாவில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்குச் சொந்தமான எல்பிஜி திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

1,100 கோடி ரூபாய் முதலீட்டில் செலபடுத்தப்பட்டுள்ள இந்த முனையத்திலிருந்து, ஆண்டுக்கு கோடி மில்லியன் மெட்ரிக் டன் எல்பிஜி உற்பத்தி செய்ய முடியும். இங்கு இருந்து வட கிழக்கு மாநிலங்களுக்குத் தங்கு தடையின்றி எல்பிஜி சப்ளை கிடைக்கும்.

அடுத்ததாக 348 கிலோ மீட்டர் தோபி-துர்காபூர் இடையிலான எல்பிஜி எரிவாய் பைப்லைன் திட்டத்தையும் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் 2,400 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்து இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனத்துக்குச் சொந்தமான கேட்டலிடிக்-Isodewaxing அலகு கட்டுமான பணிகளைத் தொடக்கி வைக்கிறார். இந்த திட்டத்தால் இந்தியாவுக்கு ஆண்டுக்கு 185 மில்லியன் டாலர் அந்நிய செலாவணி பரிமாற்ற செலவு ஏற்படும் என்று பிரதமர் மோடியின் அறிக்கை கூறுகின்றது.

அதுமட்டுமல்லாமல் 190 கோடி மதிப்பிலான ராணிசக் 4 வழிச்சாலையுடனான மேம்பாலத்தைத் தொடக்கி வைக்கிறார் பிரதமர் மோடி.

2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தமிழகத்தின் மதுரையில் பிரதமர் மோடி ஏயிம்ஸ் மருத்துவனை பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டினார் அதே போல தமிழகத்தில் எந்த பணிகளை எல்லாம் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

seithichurul

Trending

Exit mobile version