இந்தியா

விவசாயிகள் நிதி உதவி திட்டம்; இன்று தொடக்கி வைக்கும் பிரதமர்; சிறப்பம்சங்கள் என்ன?

Published

on

இடைக்காலப் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவசாயிகள் நிதி உதவி திட்டம் “பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா” திட்டத்தை இன்று பிரதமர் மோடி தொடக்கி வைக்கிறார்.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டம் கீழ் 5 ஏக்கருக்கும் குறைவான நில வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டு மூன்று தவணையாக 6,000 ரூபாயாக அளிக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் முதல் தவணையாக விவசாயிகளுக்கு 2,000 ரூபாய் அளித்து இன்று(2019 ஃபிப்ரவரி 24) கோரக்பூரிலிருந்து பிரதமர் மோடி தொடக்கி வைக்கிறார்.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா

விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தைப் பிரதமர் மோடி தொடக்கி வைப்பது மட்டுமில்லாமல் நாடு முழுவதிலும் உள்ள பயணாளிகளிடம் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் கலந்துரையாடவும் உள்ளார்.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டம் கீழ் வழங்கப்படும் நிதி உதவியானது நேரடியாகப் பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்தத் திட்டம் குறித்து மக்கள் அறிந்துகொள்ள https://pmkisan.gov.in/ என்ற இணையதளம் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version