இந்தியா

பிரதமருக்கு 2ஆம் டோஸ் தடுப்பூசி: செலுத்திய நர்ஸ்கள் யார் யார் தெரியுமா?

Published

on

இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை அனைத்து மாநில அரசுகளும் ஏற்படுத்தி வருகின்றன. அதேபோல் பிரதமர் உள்பட மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் டோஸை செய்து கொண்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று இரண்டாம் டோஸை எடுத்து கொண்டார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி இரண்டாம் டோஸ் செலுத்தப்பட்டது.

இந்த தடுப்பூசியை புதுவையை சேர்ந்த நிவேதா என்ற நர்ஸ் மற்றும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நிஷா ஷர்மா என்ற நர்ஸ் ஆகியோர் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியின் கொரோனா வைரஸ் இரண்டாம் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களிலும் இணையதளங்களிலும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உள்ள அனைவரும் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே பிரதமர் தனது இரண்டாம் டோஸை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று பிரதமர் தலைமையில் 12 மாநில முதல்வருடன் ஆலோசனை நடைபெற உள்ளது என்பதும், இந்த ஆலோசனைக்கு பின்னர் நாடு முழுவதும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version