இந்தியா

இந்தியா- இத்தாலி இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Published

on

இந்தியா – இத்தாலி இடையே வர்த்தக உறவை மேம்படுத்துவது உட்பட 15 ஒப்பந்தங்களைக் கையெழுத்தாகியுள்ளன.

இந்தியா – இத்தாலி பிரதமர்கள் இருவரும் காணொலி காட்சி மூலம் சந்தித்துப் பேசும் உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது..

அப்போது பெருந்தொற்று பாதிப்பு, இரு நாடுகள் இடையிலான உறவு, உலகளாவிய பிரிச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “வாய்ப்புகளையும் சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். பெருந்தொற்றுக்கு பிந்தைய சூழலை எதிர்கொள்ளும் வகையில் நாம் நம்மை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து இருநாடுகள் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துதல், தொழில்நுட்ப அறிவை பகிர்ந்துகொள்ளுதல், சுற்றுச்சூழல் மேம்படும், ஊடகம், படம் தயாரித்தல், முதலீடு, மீன் பிடித்தல் உட்பட 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

seithichurul

Trending

Exit mobile version