இந்தியா

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி சீனா, பாகிஸ்தானுக்கு விடுத்த எச்சரிக்கை!

Published

on

பிரதமர் மோடி இந்தாண்டு தீபாவளியை ராஜஸ்தான் செய்சல்மரில் உள்ள எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுடன் கொண்டாடினார். அப்போது சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.

2014-ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற மோடி, 2015-ம் ஆண்டு முதல் இந்திய ராணுவ வீரர்களுடன் பஞ்சாப் எல்லையில் தீபாவளியைக் கொண்டாடினார். 2016-ம் ஆண்டு இந்தோ-திபெத் எல்லைப் பகுதி இராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். 2017-ம் ஆண்டு ஜாஈரின் குரோஸ் பகுதியிலும், 2018-ம் ஆண்டு இந்திய – சீனா எல்லை முகாமில் தீபாவளியைக் கொண்டாடினார்.

2019-ம் ஆண்டு இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்ற மோடி, 2020-ம் ஆண்டின் தீபாவளியை ராஜஸ்தான் செய்சல்மரில் உள்ள எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுடன் கொண்டாடினார். அப்போது ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, “உலகில் உள்ள எந்த சக்தியாலும் இந்திய வரர்கள் எல்லையைப் பாதுகாப்பதைத் தடுக்க முடியாது. அதைச் சோதித்தவர்களை அரசியல் ரீதியாகவும், பலத்தின் மூலமாகவும் தகுந்த பதிலடியை இந்தியா வழங்கியுள்ளது. இந்திய ஒரு போது தங்களது நலன்களுக்கு எதிரான நடவடிக்கையில் சமரசம் செய்துகொள்ளாது என்பதை உலகம் அறிந்து இருக்கிறது என்று பிரதமர் மோடி மறைமுகமாகச் சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

பிரதமர் மோடி இதுபோன்று எச்சரிக்கை விடுப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல, சென்ற வாரம் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றும் போதும், அனைவரின் இறையாண்மைக்கும், பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.

ஜூலை மாதம் இந்திய – சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் 20 இராணுவ வீரர்கள் இறந்த போது திடீரென்று சென்ற பிரதமர் மோடி, எல்லை விரிவாக்கத்துக்கான காலம் எல்லாம் முடிந்துவிட்டது, எல்லை விரிவு படுத்தியவர்கள் இழந்ததையும், கட்டாயத்தின் பேரில் திரும்பிச் சென்ற வரலாறு அனைவருக்கும் தெரியும் என்று கூறியிருந்தார்.

சீனாவின் ஆக்கிரமிப்புக்குக் காரணம் என்று நம்பப்படும் எல்லைப் பகுதியில் சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுவதை இந்தியா நிறுத்தாது என்பதையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இது ஆதாரமற்றது, மிகைப்படுத்தி இந்தியா கூறுகின்றது என்று சீனா கூறியது.

நேற்று பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லையில் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்ததை அடுத்து, இராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடச் சென்ற பிரதமர் மோடி சூசகமாகப் பாகிஸ்தான், சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், 1971-ம் ஆண்டு லோங்கேவாலா போரில், மிகப் பெரிய பாகிஸ்தான் இரணுவத்தை இந்தியாவின் சிறிய இராணுவ குழு விரட்டி அடித்ததை நினைவு கூர்ந்த மோடி, எல்லையில் தங்களது வீரத்தைச் செலுத்திய வீரர்களுக்கு அஞ்சலியும் செலுத்தினார்.

seithichurul

Trending

Exit mobile version