இந்தியா

அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்.. எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஜாலியான பிரதமர் மோடி!

Published

on

தமிழகத்தில் ஆளும் கட்சி தலைவரும் எதிர்க்கட்சி தலைவரும் நேருக்கு நேர்சந்தித்தால் பரஸ்பரம் சிரித்து கொள்ளும் ஒரு நாகரீகம் கூட இல்லை என்பதும் ஜெயலலிதா கருணாநிதி காலத்திலிருந்தே இது தான் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் மத்திய அரசை பொறுத்தவரை ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொண்டாலும் நேரில் பார்க்கும்போது நாகரிகமாக நடந்து கொள்வது பல ஆண்டுகளாக கடை9பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜி-20 அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடந்த போது அதில் பிரதமர் மோடி எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சிரித்து பேசி அவர்களுடன் நலம் விசாரித்து அவர்களுடன் தேனீர் அருந்திய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், மகாராஷ்டிர முதலமைச்சர் ஷிண்டே உள்பட எதிர்கட்சி பிரபலங்களுடன் பிரதமர் மோடி சிரித்து பேசிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

எதிர்க்கட்சி தலைவர்களை எதிரிக்கட்சி தலைவர்களாக நினைக்காமல் தங்களை விமர்சனம் செய்த தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட அனைவரிடமும் பிரதமர் மோடி சகஜமாக பழகியது பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது. அதேபோல் எதிர்க்கட்சி தலைவர்களும் பிரதமர் மோடியிடம் நாகரீகமாக நடந்து கொண்டனர்.

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன உள்பட பலர் பிரதமர் மோடியை பகிரங்கமாகவே கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் அவர்கள் இருவரிடமும் பிரதமர் மோடி நேற்றைய கூட்டத்தில் மிகவும் நெருக்கம் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் பார்க்கும்போது அரசியலில் இதெல்லாம் சாதாரணம் என்ற டயலாக் தான் நினைவுக்கு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version