இந்தியா

பெட்ரோல் விலை: தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்த பிரதமர் மோடி!

Published

on

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தமிழ்நாடு உள்பட ஒரு சில மாநிலங்கள் குறைக்கவில்லை என பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதமே எரிபொருள் மீதான வரியை மத்திய அரசு குறைத்து விட்டது என்றும், பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் குறைக்க வேண்டும் என்றும் வரியை குறைத்து அதன் பலனை மக்களுக்கு மாநில அரசுகள் கொடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார் .

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய நான்கு மாநிலங்கள் மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்கவில்லை என்றும் மத்திய அரசுக்கு செவி கொடுக்காத மாநில மக்கள் தொடர்ந்து இன்னலுக்கு ஆளாகின்றனர் என்றும் சென்னையில் 111 ரூபாய்க்கும் அதிகமாக பெட்ரோல் விலை விற்பனை செய்யப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் .

தமிழ்நாடு, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வாட் வரியை குறைக்காததால் தான் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்திருப்பதாகவும் இதுதொடர்பாக மாநில முதல்வர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார் .

மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மாநிலங்கள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என பிரதமர் மோடியின் கருத்துக்கு தமிழக அரசிடமிருந்து என்ன பதில் வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

seithichurul

Trending

Exit mobile version