இந்தியா

5ஜி சேவையே இன்னும் வரல, அதற்குள் 6ஜி சேவை அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி!

Published

on

இந்தியாவில் இன்னும் 5ஜி சேவையை தொடங்கப்படாத நிலையில் 6ஜி சேவை குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் தற்போது 5ஜி சேவை ஆரம்பிக்கப்பட்டு விட்டது என்பதும் மின்னல் வேகத்தில் இன்டர்நெட் கிடைக்கும் வசதி அங்குள்ள மக்களுக்கு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் பயிற்சி 5ஜி சேவை வந்துவிடும் என்றும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் அடுத்த பத்தாண்டுகளில் 6ஜி சேவை ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் அடுத்த பத்தாண்டுகளில் 6ஜி சேவையை தொடங்க முடியும் என்று நம்பிக்கை கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

450 பில்லியன் இந்திய பொருளாதாரத்திற்கு 5ஜி சேவை பங்காற்றும் என டிராய் அமைப்பின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார். இந்தியாவில் விரைவில் 5ஜி சேவையும் அடுத்த பத்தாண்டுகளில் 6ஜி சேவையும் வரும் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது நாட்டு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version