தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று முதல் 11 புதிய மருத்துவ கல்லூரிகள்: எத்தனை எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாக கிடைக்கும்?

Published

on

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் இருந்து பிரதமர் மோடி இன்று காணொளி மூலம் புதிய மருத்துவக் கல்லூரியை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் காணொளியில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூபாய் நான்காயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த 11 கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள மாவட்டங்கள் பின்வருமாறு: விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி.

மேற்கண்ட 11 மாவட்டங்களில் இன்று திறக்கப்படும் மருத்துவக் கல்லூரிகளை அடுத்து கூடுதலாக 1450 எம்பிபிஎஸ் இடங்கள் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 5750 என உயரும் என்பதும், ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் இருந்து 5750 புதிய டாக்டர்கள் உருவாகுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version