இந்தியா

நேதாஜி பிறந்தநாளை வீர திருநாளாக கொண்டாட முடிவு: பிரதமர் மோடி அறிவிப்பு!

Published

on

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 28அடி உயர ஹாலோகிராம் சிலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி அவர்கள் நேதாஜி பிறந்த நாளை வீர திருநாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 28 அடி உயரம் 6 அடி அகலமும் கொண்ட ஹாலோகிராம் சிலை இன்று திறக்கப்பட்டது. இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சந்திர போஸின் மின்னொளி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125வது பிறந்த நாளை ஒட்டி இந்த சிலை திறப்பு விழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசியபோது, ‘இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்றும் நாம் நிற்கும் இந்த இடமும் வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்றும் மிக விரைவில் இங்கு கிரானைட் கல்லால் ஆன நேதாஜி சிலை நிறுவப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நேதாஜி பிறந்தநாளை வீரத்திருநாளாகக் கொண்டாட முடிவு செய்துள்ளதாக கூறிய பிரதமர் மோடி அவர்கள் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள நாம் தயாராக உள்ளோம் என்றும் பேரிடரை எதிர்கொள்ள நவீன கருவிகள் நம்மிடம் உள்ளது என்றும் தேசிய பேரிடர் படையை வலுப்படுத்தியுள்ளோம் என்றும் நேதாஜியின் கனவு தற்போது நனவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் விண்வெளி தொழில்நுட்பம் முதல் திட்ட மேலாண்மை வரை சிறப்பான நடைமுறைகள் ஏற்கப்பட்டன என்றும் அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அணைகள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றி உள்ளோம் என்றும் தெரிவித்தார். மேலும் விடுதலை பெறவேண்டும் என்ற நம்பிக்கையை புகுத்தியவர் நேதாஜி என்றும் இந்திய தாய்நாட்டை சுதந்திரத்திற்காக போர்க்களமாக மாற்றியவர் நேதாஜி என்றும் புகழாரம் சூட்டினார்.

seithichurul

Trending

Exit mobile version