தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது ஏன்? தமிழகத்தை விட்டுவிட்டு புதுச்சேரியை கேள்வி கேட்ட பிரதமர் மோடி

Published

on

மத்திய அரசு ஜனநாயகத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தனர். இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் புதுச்சேரியில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை, அது ஏன் என்று பிரதமர் மோடி எதிர்கேள்வி கேட்டுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஜனநாயகத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி எதிர்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, ‘காஷ்மீர் போன்ற இடங்களில் கூட உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

ஆனால் காங்கிரஸ் ஆளும் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. உச்சநீதிமன்றமே புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அப்படி இருந்தும் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை. அது ஏன்?’ இவ்வாறு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக தமிழகத்திலும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமலே இருக்கிறது. இருப்பினும் பிரதமர் மோடி தமிழகத்தை குறிப்பிடாமல், காங்கிரஸை மட்டும் குறியாக வைத்து பேசியிருப்பது எந்த விதத்தில் நியாயம் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version