இந்தியா

முப்படை தளபதி பிபின் ராவத் மறைவு: மோடி, ராஜ்நாத் சிங் இரங்கல்!

Published

on

இன்று காலை குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதிகள் பிபின் ராவத் உள்பட 13 பேர் காலமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவரது மறைவிற்கு பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றில் முப்படை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்பட 14 பேர் பயணம் செய்தனர். இந்த ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளானது என்பதும் இதில் பயணம் செய்த 13 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்றுமுன்னர் ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத் அவர்களும் காலமானார் என ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் முப்படை தளபதி பிபின் ராவத் அவர்களின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

பிபின் ராவத் அவர்கள் ஒரு சிறந்த வீரராக இருந்தவர் என்றும் உண்மையான தேசப்பற்றாளர் என்றும் ஆயுதப் படைகளை நவீன படுத்துவதில் சிறந்த பங்காற்றியவர் என்றும் அவரது மரணம் என்னை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பாதுகாப்பு அம்சங்கள் உள்பட பல்வேறு அம்சங்களில் சிறப்பாக பணியாற்றியவர் என்றும் அவரது சேவையை இந்தியா என்றும் மறக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில் ’ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்பு படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் ஆயுதப் படை வீரர்களின் திடீர் மரணம் ஆழ்ந்த வேதனை அளிக்கிறது என்றும் நமது ராணுவத்திற்கும் நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version