இந்தியா

கொரோனா தடுப்பூசி எல்லோருக்கும் செலுத்திய பிறகு பிரதமர் மோடி போடுகிறாரா?

Published

on

கொரோனா தடுப்பூசி 2 ஆம்  கட்டமாக செலுத்தப்படும் போது பிரதமர் மோடி, எம்பிக்கள் போட்டுக்கொள்வதற்கு வாய்ப்புள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

நாடு முழுவதும் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சிலருக்கு பக்க விளைவுகளும் வந்துள்ளன. முதற்கட்டமாக இந்தத் தடுப்பூசி போடப்படும் போது, பிரதமர் மோடியும் போட்டுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் போட்டுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் போது பிரதமர் மோடியும், 50 வயதைத் தாண்டிய எம்பிக்கள், அமைச்சர்கள் போட்டுக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுதொடர்பாக பிதரதமர் அலுவலகத்தில் இருந்து உறுதியான தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

முன்னதாக கொரோனா தடுப்பூசிகள் சிலருக்கு பக்கவிளைவுகள் வரலாம் என்றும், எனவே பொதுமக்கள் தங்கள் மருத்துவரிடம் தங்களைப் பற்றி அனைத்தையும் கூற வேண்டும் என்றும் தடுப்பூசி நிறுவனங்கள் தெரிவித்திருந்தன. இதுதொடர்பான முழுமையான விவரங்கள் சீரம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version