இந்தியா

10 லட்சம் பேருக்கு அரசு வேலை.. வேலைவாய்ப்பு மேளாவை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Published

on

மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள 10 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு மேளாவை பிரதமர் மோடி சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் முதல் நாளான தந்தேராஸ் (சனிக்கிழமை) அன்று வேலைவாய்ப்பு மேளாவை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, 75 ஆயிரம் நபர்களுக்குப் பணி ஆணையயும் வழங்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறையில் 2.5 லட்சம் காலி பணியிடங்களையும், ரயில்வேவில் 2.9 லட்சம் காலி பணியிடங்களும், உள்துறை அமைச்சகத்தின் கீழ் 1.2 லட்சம் காலி பணியிடங்களும் இந்த 10 லட்சம் வேலைவாய்ப்புகளில் அடக்கம்.

இந்தியாவில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. விரைவில் குஜராத் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடைபெற உள்ளது. 2024-ம் ஆண்டு மீண்டும் தேர்தலைச் சந்திக்க வேண்டும்.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கும் விதமாக பிரதமர் மோடி இந்த 10 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version