இந்தியா

ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம்.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Published

on

கொரோனா பாதிப்பால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.

சொந்த ஊர்களுக்கு திரும்பியதால் பொருளாதாரம் இல்லாத நிலையில், உணவுக்குக் கூட வழியில்லாமல் இருந்து வந்தனர், மத்திய அரசு கொரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை மீட்க 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை அறிவித்தது.

அதில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் வேலைவாய்ப்பை அளிப்பதாகும். அதற்காக ரூ.50,000 கோடி ரூபாய் ஒதுக்குவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார்.

இன்று அந்த திட்டத்தைப் பீகாரிலிருந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். அதன்படி புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் இனி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் இணைந்து பணிபுரியலாம். அதற்கான சம்பளம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படும்.

முதற்கட்டமாகப் பீகார், உத்திர பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் ஒரிசா ஆகியாக மாநிலங்களில் 125 நாட்களுக்கு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

துப்புரவு பணிகள், ஏரி தூர் வாரும் பணி என 25 விதமான பணிகளை இந்த திட்டம் கீழ் கிராமப்புறத்தில் உள்ளவர்கள் மற்றும் சொந்த ஊர் திருப்பிய புலம் பெயர்ந்தவர்கள் செய்யக்கூடிய திட்டமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை, ரயில்வே, சுரங்கம், குடிநீர் வழங்கல், தொலைத்தொடர்பு, வேளாண்மை உள்ளிட்ட 12 துறைகள் இந்த திட்டத்தை இணைந்து செயல்படுத்த உள்ளன.

seithichurul

Trending

Exit mobile version