தமிழ்நாடு

என்ன மோடி சாடிஸ்டா?.. ஸ்டாலின்தான் சாடஸ்ட்.. தமிழிசை நக்கலோ நக்கல்!

Published

on

சென்னை: பிரதமர் மோடியை ’சாடிஸ்ட்’ என கூறிவரும் ஸ்டாலின் இனிமேல் ’சாடஸ்ட்’ என அழைக்கப்படுவார் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் சென்னையில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடந்தது. இதில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ”மோடி ஒரு சாடிஸ்ட்” என்று குறிப்பிட்டு இருந்தார். இவர் இந்த பேச்சு இந்தியா முழுக்க வைரலானது.

பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், பிரதமர் மோடியை ’சாடிஸ்ட்’ என கூறிவரும் ஸ்டாலின் கூறி வருகிறார். பிரதமர் மோடி சாடிஸ்ட் கிடையாது.

மோடியை அப்படி கூறும் ஸ்டாலின் இனிமேல் ’சாடஸ்ட்’ என அழைக்கப்படுவார் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version