இந்தியா

பிரதமர் மோடி, அதானிக்கு ஏஜெண்ட்… இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் ஆவேசம்!

Published

on

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு அவரது பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன் பிரதமர் மோடியை அதானியின் ஏஜெண்ட் என விமர்சித்தார்.

#image_title

விடுதலை சிறுத்தை கட்சியினரின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு கட்சியினரும் ஆதரவு அளித்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன் கலந்து கொண்டு பேசிய போது, பிரதமர் நரேந்திர மோடி அதானிக்கு ஏஜெண்ட். இதைவிடக் கேவலம் வேறொன்றும் இருக்க முடியாது. தனிப்பட்ட முதலாளிக்கு 140 கோடி மக்களுக்கான பிரதமர் ஏஜெண்ட்டாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். அதானியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே நாடாளுமன்றம் நடக்கவில்லை.

2019-இல் போடப்பட்ட வழக்கிற்கு 2023-இல் தீர்ப்பு வழங்குகிறார்கள். அந்த தீர்ப்பில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கிறார்கள். தீர்ப்பு வழங்கப்பட்டாலும் தீர்ப்பு அமலாகவில்லை. ஆனால் அவசரமாக 24 மணிநேரத்தில் பதவி பறிக்கப்படுகிறது. வீட்டைக் காலி செய் என உத்தரவிடப்படுகிறது. இது அப்பட்டமான ஜனநாயக படுகொலை என்றார்.

seithichurul

Trending

Exit mobile version