இந்தியா

75வது சுதந்திரதினம்: டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி!

Published

on

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் சற்றுமுன் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரையாற்றுகிறார்.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை அடுத்து இன்று 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றிய நிலையில் அனைத்து மாநிலங்களிலும் முதலமைச்சர்கள் தேசிய கொடி ஏற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்முறையாக செங்கோட்டையில் தேசியக்கொடியை இன்னும் சில மணி நேரத்தில் ஏற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்னர் டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய பிரதமர் மோடி அவர்கள் சிறப்புரை ஆற்றி வருகிறார். பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றும் போது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 75வது சுதந்திர தின விழா டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்கள் வீராங்கனைகள் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கொண்டனர் என்பதும் குறிப்பாக தங்கம் என்ற நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்ட நமது விளையாட்டு வீரர்களை பாராட்டுவோம் என்றும் சிறப்பாக விளையாடி அவர்கள் தேசத்தின் பெருமையை ஒலிம்பிக்கில் நிலைநாட்டினர் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் தனது உரையில் கூறியபோது நாட்டிற்கு பெருமை தேடித்தந்த விளையாட்டு வீரர்களுக்கு கைகளை தட்டி உற்சாகம் ஏற்படுத்துவோம் என்று கூறினார். மேலும் கொரோனா சமயத்தில் நமக்கு சேவை செய்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் என அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் என்றும் தனது உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மகாத்மா காந்தி, சுபாஷ்சந்திரபோஸ், ஜவகர்லால் நேரு, அம்பேத்கர் உள்ளிட்டோரின் அரும்பணிகளை நினைவு கூறுவோம் என்றும், இந்த நாட்டை கட்டமைக்க பாடுபட்ட அனைவரையும் நினைவு கூர்வோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும் கொரோனா காலத்தில் மருத்துவர்கள் செவிலியர்கள் தடுப்பூசி கண்டுபிடித்தவர்கள் என அனைவருக்கும் எனது வணக்கங்கள் என்றும் நமது விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவு கூறுவதற்கான தினம் இன்று என்றும் அவர் தெரிவித்தார்.

Trending

Exit mobile version