தமிழ்நாடு

இப்போதும் சொல்கிறேன்.. மோடி சாடிஸ்ட்தான்.. தமிழிசைக்கு ஸ்டாலின் பதிலடி!

Published

on

சென்னை: இப்போதும் சொல்கிறேன் பிரதமர் மோடி ஒரு சாடிஸ்ட்தான் என்று விழுப்புரத்தில் நடந்த விழா ஒன்றில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னையில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடந்தது. ”மோடி ஒரு சாடிஸ்ட்” என்று கோபமாக குறிப்பிட்டு இருந்தார். இந்த பேச்சு அவரது அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான பேச்சாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்தார். அதில், பிரதமர் மோடியை ’சாடிஸ்ட்’ என கூறிவரும் ஸ்டாலின் கூறி வருகிறார். பிரதமர் மோடி சாடிஸ்ட் கிடையாது. மோடியை அப்படி கூறும் ஸ்டாலின் இனிமேல் ’சாடஸ்ட்’ என அழைக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

இப்போதும் சொல்கிறேன் பிரதமர் மோடி ஒரு சாடிஸ்ட்தான். மோடி இதுவரை கஜா சேதத்தை வந்து பார்வையிடவில்லை. இதுவே குஜராத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடி சென்று பார்த்திருப்பார். தமிழகத்திற்கு ஒரு பிரச்சனையை என்றதும் அவர் இந்த பக்கம் கூட வரவில்லை. கஜா புயலுக்கு மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி தரவில்லை.

author avatar
seithichurul

Trending

Exit mobile version