உலகம்

கமலா ஹாரீஸ் இந்தியா வரவேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு!

Published

on

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அவர் இன்று அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்களை சந்தித்து இந்தியாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடந்த குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இந்தியாவுக்கு வருகை தர வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாகவும் அதனை ஏற்றுக்கொண்டு அவரை வரவேற்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ் ஆகிய இருவரும் நேற்று கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய கமலா ஹாரிஸ் இந்தியா கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தி வருவதற்கு தனது பாராட்டுகள் என்றும் தினமும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போட்டும் திறனை மேம்படுத்துவதற்கு வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

அதேபோல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை அமெரிக்கா உள்பட உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது நன்றி தெரிவித்த கமலா ஹாரிஸ், அமெரிக்காவுக்கும் இந்தியா முக்கியமான நட்பு நாடு என்றும் பருவநிலை மாற்றம் குறித்து இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைக்கு தனது பாராட்டுகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து பேசிய பிரதமர் மோடி ’கொரோனா இரண்டாவது அலையால் இந்தியா பாதிக்கப்பட்ட போது அமெரிக்கா உதவிக்கரம் நீட்டியதாகவும் அதற்கு தனது நன்றி என்றும் அவர் தெரிவித்து கொண்டார். அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி என்றும் உலகெங்கிலும் உள்ள பல பெண்களுக்கு உத்வேகத்தின் ஆதாரமாக கமலா ஹாரீஸ் விளங்குவதாகவும் பாராட்டு தெரிவித்தார். மேலும் கமலா ஹாரிஸ் அவர்களின் இந்திய வருகையை கோடிக்கணக்கான இந்திய மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்றும் அவர்களது எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் நேற்று வாஷிங்டனில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பிரதமர் மோடி சந்திப்பு நடத்தினார். ஆஸ்திரேலிய பிரதமர் இந்திய பிரதமரின் தடுப்பூசி ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும் பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் யோஷிஹைடே சுஹா அவர்களையும் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது

Trending

Exit mobile version