இந்தியா

தமிழகம் உள்பட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Published

on

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தாலும் மூன்றாவது அலை மிக விரைவில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்து வருகிறார்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அசாம் உட்பட 8 வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்த பிரதமர் மோடி, இன்று தமிழகம் உள்பட 6 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார். இந்த ஆலோசனையில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய 6 மாநில முதல் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனைவரையும் வலியுறுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி 6 மாநில முதல்வர்களிடம் அறிவுறுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது

மூன்றாவது அலை விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்த ஆலோசனை கலந்து கொண்டுள்ள நிலையில் பிரதமருடனான ஆலோசனைக்கு பின்னர் இன்று மாலை அல்லது நாளை காலை ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

seithichurul

Trending

Exit mobile version