இந்தியா

சுற்றுலா தலங்களில் மாஸ்க் இல்லாமல் சுற்றுபவர்களால்…- பிரதமர் மோடி கவலை

Published

on

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் சற்றுத் தணிந்துள்ள நிலையில், பல்வேறு மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உத்தரவிட்டு உள்ளன.

இந்நிலையில் பல மாநிலங்களிலும் மக்கள் சுற்றுலா தலங்களுக்குப் படையெடுத்து வருகிறார்கள். மேலும் சந்தை போன்ற பொது இடங்களிலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடுகின்றனர்.

Read More: கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது!

இப்படி கூடும் பெரும்பான்மையான மக்கள் முகக் கவசம் அணியாமல் சுற்றித் திரியும் காணொலிகள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வட்டமடித்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் அது குறித்து கவலையடைந்து கருத்து கூறியுள்ளார் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி. அவர், ‘சுற்றுலா துறை, வர்த்தகம் உள்ளிட்டவை கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது என்பது உண்மை தான்.

அதே நேரத்தில் இதைக் காரணம் காட்டி மலைப் பிரதேசங்களிலும், சுற்றுலா தலங்களிலும், மார்க்கெட்டுகளிலும் முகக் கவசம் இல்லாமல் மக்கள் கூடுவதை ஒரு நாளும் ஏற்றுக் கொள்ள முடியாது.

கொரோனா வைரஸ் என்பது தானாக வந்தும் போயும் விடுவதில்லை. நாம் அலட்சியத்துடன் நடந்து கொண்டால் மீண்டும் பரவத் தொடங்கிவிடும். 3 வது அலையைத் தடுத்தாக வேண்டும். முகக் கவசம் இல்லாமல் பொது இடங்களில் மக்கள் கூடுவதை நாம் தடுத்தாக வேண்டும்’ என்று எச்சரித்து உள்ளார்.

Also Read:

மாஸ்க் போடுங்கள் என கெஞ்சும் சிறுவன்… கண்டுகொள்ளாமல் கடந்து போகும் மக்கள்(வீடியோ)

seithichurul

Trending

Exit mobile version