இந்தியா

நாடாளுமன்றத்தில் கண்ணீர்விட்டு அழுத பிரதமர் மோடி..! – காரணம் என்ன..?

Published

on

பிரதமர் நரேந்திர மோடி, இன்று நாடாளுமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான குலாம் நபி அசாத்தின், ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக் காலம் முடிவடையும் நிலையில், அவர் குறித்துப் பேசும் போது குரல் தழுதழுத்து உடைந்து அழுதார் மோடி.

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் முதல்வராக குலாம் நபி அசாத் இருந்த அதே சமயத்தில், குஜராத் மாநில முதல்வராக இருந்தவர் நரேந்திர மோடி. இருவரும் முதல்வர்களாக இருந்த சமயத்தில் நடந்த ஓர் விஷயம் குறித்து நினைவுகூர்ந்து உருகியுள்ளார் மோடி.

நாடாளுமன்றத்தில் பேசிய மோடி, ‘எனக்கு அசாத்தை பல ஆண்டுகளாக தெரியும். அவருக்கு அரசியலைத் தவிர்த்து தோட்டக் கலையில் அதிக ஆர்வம் உள்ளது.

அசாத், ஜம்மூ காஷ்மீரின் முதல்வராக இருந்த காலத்தில் காஷ்மீரில், குஜராத்தைச் சேர்ந்த சிலர் தீவிரவாத தாக்குதலால் மாட்டிக் கொண்டனர். அவர்களை மீட்க நாங்கள் போராடி வந்தோம். அப்போது அசாத், எனக்கு போன் மூலம் அழைத்து, குடும்ப உறுப்பினர் போல வருத்தப்பட்டுப் பேசினார். அதிகாரம் வரும், போகும். ஆனால், அதை ஒருவர் எப்படி கையாளுகிறார் என்பது தான் முக்கியம்’ என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார் மோடி.

அவர் தொடர்ந்து, ‘நீங்கள் ஓய்வெடுக்க நான் அனுமதிக்கப் போவதில்லை. நான் உங்கள் ஆலோசனைகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வேன். என் கதவுகள் உங்களுக்கு எப்போதும் திறந்தே இருக்கும். அசாத் என் உண்மையான நண்பர். அவருக்கு மாற்றான நபரைக் கண்டறிவது அவ்வளவு சுலபம் அல்ல’ என்றார்.

அவருக்கு அடுத்துப் பேசிய அசாத், ‘நீங்களும் நானும் பல முறை நாடாளுமன்றத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளோம். ஆனால், அது எப்போதும் தனிப்பட்ட உறவில் தலையெடுக்காமல் பார்த்துக் கொண்டீர்கள்’ என்று நெகிழ்ந்தார்.

 

Trending

Exit mobile version