தொழில்நுட்பம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரம்.. பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் கண்டனம்!

Published

on

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கலவரத்தை எதிர்த்து உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில் அதிபர் தேர்தலில் வெற்றியை உறுதி செய்வதற்கான அதிகாரப்பூர்வ சான்று வழக்கும் பணி நேற்று நடைபெற்று கொண்டிருந்தது. அதனைப் பொறுக்காத ட்ரம்ப் தேர்தல் குறித்து சர்ச்சையான பேச்சுவார்த்தைகளைக் கூறினார்.

அதனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் கலவரத்தை ஏற்படுத்தினார். இதனால் அங்கிருந்த பாதுகாப்பு படையினருடன் மோதல் ஏற்பட்டது. அதில் ஒரு பெண் போலீசார் படுகொலை செய்யப்பட்டார். அமெரிக்கா முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது. ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் வன்முறையை தூண்டும் கருத்துகளைத் தெரிவித்ததால் அவரது கணக்கு 24 மணிநேரத்திற்கு முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவில் நடந்த இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நாடாளுமன்றத்தில் நடந்த வன்முறை மற்றும் கலவரம் குறித்த செய்திகள் தனக்கு வேதனை அளிப்பதாகவும், அமைதியான முறையில் அதிகாரம் மாற்றப்பட வேண்டும் எனவும், ஜனநாயக நடைமுறைகளைச் சட்டவிரோத கலவரங்கள் சீர்குலைக்க அனுமதிக்க கூடாது எனவும் கூறியுள்ளார்.

மேலும் இச்சம்பவம் குறித்து கனட பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன், ஸ்வீடன் பிரதமர் ஸ்டீவன் லோவென் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் கண்டம் தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version