இந்தியா

மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்தை திடீரென ரத்து செய்த பிரதமர் மோடி: என்ன காரணம்?

Published

on

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் எட்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இன்றுடன் ஆறு கட்ட தேர்தல் முடிவடைந்து விட்டது. இன்னும் இரண்டு கட்ட தேர்தல் மட்டுமே நடைபெற உள்ள நிலையில் தற்போது அங்கு தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாளை மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென பிரதமரின் தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா பரவல் குறித்து நாளை உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதால் மேற்கு வங்கத்தில் நடைபெறவிருந்த தேர்தல் பிரசாரத்தை பிரதமர் ரத்து செய்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கொரோனா பரவலை தடுப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு காட்டமான அறிவுறுத்தல் தெரிவித்துள்ளதை அடுத்து தனது தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி ரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version